கள்ளநோட்டு வழக்கில் சிக்கிய அரசு பெண் அதிகாரி !! திடுக்கிடும் பிண்ணனி!!

 
ஜிஷா மோள்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வியாபாரி என்றுகூறி பெண் ஒருவர் ரூ.50 ஆயிரம் பணத்தை டெபாசிட் செய்தார். வங்கி அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அதில் 7 ரூ.500 நோட்டுகள் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். 

உடனே வங்கிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பணத்தை கொடுத்தது அந்த பகுதியில் உள்ள எடத்துவா விவசாயத்துறை பெண் அதிகாரியான ஜிஷா மோள் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகின.

ஜிஷா மோள்

ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கள்ளநோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது? என்ற விவரத்தை அவர் போலீசிடம் தெரிவிக்கவில்லை.

மாராரிக்குளம் விவசாயத்துறை அதிகாரியாக ஜிஷா மோள் பணிபுரிந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷா மோள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் எடத்துவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

ஜிஷா மோள்

மாடல் அழகியான இவர் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த பேஷன் ஷோக்களில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளார்.இது தவிர ஏர் இந்தியாவில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்து உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு அவருக்கு கேரள விவசாயத் துறையில் வேலை கிடைத்தது. கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிஷாமோள் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீர்மானித்து உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web