"ஆளுநருக்கு பட்டம் வழங்கத் தகுதி இல்லை" - விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர்!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா விவகாரத்தில் மீண்டும் ஒரு மோதல் வெடித்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணிப்பது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான செயல்களையே செய்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கும் தகுதி இல்லை" என்று அமைச்சர் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில், அரசு தயாரித்த உரையைப் படிக்க மறுத்து ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இது ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான விரிசலை அதிகப்படுத்தியது.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்படுவதாக மாநில அரசு ஏற்கனவே பலமுறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆண்டும் அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இதேபோல் ஆளுநர் பங்கேற்ற விழாவைப் புறக்கணித்திருந்தார். தற்போது அமைச்சர் கோவி. செழியனும் அதே பாணியைத் தொடர்ந்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
