வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

 
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை    மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!   வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை    மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!  

 

தமிழகத்தில் தனிநபர், சுய உதவி குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள் ஆகியோருக்கு பணக்கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வரும்  நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறை காரணமாக பெரும் இன்னல்கள் ஏற்பட்டு வந்தன. இதிலிருந்து  பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினரை பாதுகாக்கும் சட்ட மசோதா கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.  இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை    மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!  
இந்த மசோதாவின் படி  கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்துவது, தனியார் அல்லது வெளிதரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துவது, அரசு திட்டத்தின்கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருவது போன்றவை வலுக்கட்டாய நடவடிக்கைகளை மேற்கொண்டால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை    மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!  
கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்தாலோ,  அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தாலோ  அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும் கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது