இன்று முதல் 4 நாட்களுக்கு ஆளுநர் டெல்லி பயணம்!!

 
ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி  இன்று 4 நாள் பயணமாக   விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சர்   அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகத்தில்  அரசுடன் மோதல் போக்கும், சர்ச்சைகள், கண்டனங்களும்  அதிகரித்து வரும் நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  ஜூன் 27ம் தேதி மீண்டும் கவர்னர் சென்னை திரும்ப உள்ளார். 

ஸ்டாலின் ஆளுநர்


சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி   ஏற்றுக்கொள்ளவில்லை. இதை அவர் பகிரங்கமாக அறிவித்த போதிலும் அதிமுக, பாஜக தரப்பில் அமைச்சர்கள் மீது புகார் தெரிவித்த நிலையிலும் இன்று  டெல்லி செல்கிறார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web