கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு... பென்சில்வேனியாவில் பரபரப்பு!

தீ மளமளவென வீட்டின் பல்வேறு இடங்களுக்கும் பரவியது. அப்போது கவர்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை தட்டி எழுப்பி அவர்களை வெளியேற்றி காப்பாற்றினர். தீயணைப்பு வீரர்கள் மிகக்கடுமையாக போராடி தீயை அணைத்தனர். வீட்டின் பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 38 வயதான கோடி பால்மர் என்ற நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் மீது கொலை முயற்சி, பயங்கரவாதம், தீவைப்பு, மோசமான தாக்குதல் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து கவர்னர் ஷபிரோ போலீசார் அதிகாலை 2 மணிக்கு வந்து கதவை தட்டி எழுப்பி வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடவுளுக்கு நன்றி.
அரசியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்ற வன்முறை நம் சமூகத்தில் மிகவும் சாதாரணமாகி வருகிறது. வன்முறை எந்த பகுதியில் நடந்தாலும் அது சரியல்ல. தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தாக்குதலுக்கு நான் அஞ்ச மாட்டேன். எனது கடமையை தொடர்ந்து செய்வேன் என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!