நடுரோட்டில் மின்மாற்றியில் மோதி தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து... 20 பயணிகள் பத்திரமாக மீட்பு!

 
தீப்பற்றி தீ பேருந்து

அரியலூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று மின்மாற்றியில் மோதியதில் தீ விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் பேருந்தில் இருந்த சுமார் 20 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர்.

அரியலூரிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து நேற்று காலை 7.10 மணிக்கு 20 பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்து காலை 8.10 மணியளவில் காசாங்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பள்ளி வாகனத்துக்கு வழிவிடும் முயற்சியில் சாலையோரம் இருந்த மின்மாற்றியில் (Transformer) உரசியது.

விபத்து

மின்மாற்றியில் மோதியதால் அதிலிருந்து நெருப்புடன் புகை மண்டலமாக வெளியேறியது. இதைக் கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி ஓடினர். அப்போது, மின்மாற்றியிலிருந்து பரவிய தீ பேருந்தின் பின்பகுதிக்குள் பரவத் தொடங்கியது. தீ விபத்து ஏற்பட்ட போதும், பேருந்தின் ஓட்டுநர் ராஜ்குமார் லாவகமாகப் பேருந்தைப் பின்பக்கமாக இயக்கினார். இருப்பினும், பேருந்தின் பின்பக்க டயரில் தீப்பிடித்து எரிந்தது.

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து!

இந்த சம்பவத்தைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக விரைந்து வந்து, தங்கள் பம்ப்செட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பேருந்தின் மீது ஊற்றி, தீயை அணைத்தனர். கிராம மக்களின் துரிதச் செயல் காரணமாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், 20 பயணிகளும் எந்தவித காயமுமின்றிப் பத்திரமாகத் தப்பினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!