அரசுக்கு ரூ.25,000 கோடி வருமானம்... போதையில் தள்ளாடுது தமிழகம்... 1.12 கோடி பேர் குடிநோயாளிகள்!

 
போதை டாஸ்மாக்

மேற்கத்திய கலாச்சாரம் என மதுகுடிக்கும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவி பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வீட்டுக்கு தெரியாமல் மறைந்து ஒளிந்து மது அருந்தி கொண்டிருந்த குடிமகன்கள் சோஷியல் லிவிங் என்ற பெயரில் வீட்டிலேயே குடித்து கும்மாளமிடுவது அதிகரித்து வருவது பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் குடிநோயாளிகள் 1 கோடியை 12 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 70 லட்சம் பேர் தினமும் குடிக்கவில்லை எனில் முழுநேர நோயாளிகள் ஆவது நிச்சயம் என்ற  நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். மதுப்பழக்கம் இளைஞர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் மது விற்பனை என்ற சட்டம் இருந்தாலும் மது கடைகளில் அவை கடைபிடிக்கப்படுகிறதா என்பது பெரும் கேள்விக்குறிதான்.

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

அதே நேரத்தில் மதுப்பழக்கம் உடல்நல பிரச்சனையை மட்டுமல்லாமல் சமூக பிரச்சனையாகவும் மாறுகிறது. மது குடித்த உடனேயே அது நேரடியாக ரத்தத்தில் கலந்து விடுகிறது. சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறந்தது போல் இருந்தாலும் நாளடைவில் அது உடல் பாகங்களை சிறிது சிறிதாக கெடுத்து நமது உடல் நலனை அடியோடு சீரழிக்கும்.

ஒரு காலத்தில் ஊருக்கு ஒருவர் அல்லது இருவர் மது குடிப்பவர் ஆக இருப்பார்கள். ஆனால் இப்போது ஊருக்குள் ஒருவர் அல்லது இருவர்தான் மது குடிக்காமல் இருக்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் சிறு வயது தொடங்கி முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.  வீட்டு பெண்கள் தொல்லை தாங்காமல் இனிமேல் நான் குடிக்க மாட்டேன் என மறுபடியும் கூறினாலும் அடுத்த நாளே மதுபோதையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் அவர்கள் குடி நோயாளிகளாக மாறிவிடுகின்றனர்.

தொடக்கத்தில் சின்ன சின்ன சந்தோஷத்திற்காக குடிக்கிறேன் என வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை என தொடங்குபவர்கள் தான் . ஆனால் இந்தப் பழக்கம்  17 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வயதில் அவற்றை நிறுத்தாதவர்கள் அதற்கு பிறகு அதனை அதிகரித்துக் கொள்கிறனர். உடல் வலிக்காக குடிக்கிறேன், மன வேதனைக்காக குடிக்கிறேன் என பல காரணங்களை கூறிக் கொள்கின்றனர்.

டாஸ்மாக்

அதே நேரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள், நட்சத்திர ஹோட்டல்களில் பணியில் இருப்பவர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஐடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், பிரேத பரிசோதனை கூடத்தில் பணியாற்றுபவர்கள் ஆரம்பத்தில் சிறிய அளவில் குடிக்க பழகி காலப்போக்கில் தினசரி குடிகாரர்களாக மாறிவிடுகிறார்கள்.மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை உடனடியாக மீட்பதும் கடினம். குடிக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ ரீதியிலாகவும் மனரீதியாகவும் சில ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.  தினமும் குவாட்டருக்கு அதிகமாக குடிக்க வேண்டியவர்கள் குடி நோயாளிகள் ( ஆல்கஹால் யூஸ் டிசார்டர்) என அழைக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரை குடி நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் தான். இதனையடுத்து   லட்சத்தீவு குஜராத், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா  மாநிலங்களில் குடி நோயாளிகள் குறைவாக இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை குடி நோயாளிகள் 16 கோடி பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 19 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட ஆண்களே  95 சதவீதம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே கிராமப்புறங்களில் பெண்கள் 1.6சதவீதமும், ஆண்கள் 19.9% இருக்கிறார்கள்/ நகர்ப்புறங்களை 0.6 சதவீதம் பெண்களும், 16.5% ஆண்களும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1.12 கோடி பேர் குடி நோயாளிகளாக இருக்கிறார்கள். அவர்களில் 70 லட்சம் பேர் தினமும் குடிக்கத் தொடங்கியுள்ளனர்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குடிநோயாளிகள் ஒவ்வொரு மாதமும் குடிப்பதற்காக மட்டுமே 4312 கோடியிலிருந்து 652 கோடி வரை செலவிடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  

இதனால் ஆண்டுக்கு அவர்களுக்கு 67,552 கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது.அதே நேரத்தில் அரசுக்கும் ரூ 25000  கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.  குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகள் அளிப்பது மிகவும் அவசியம் .அப்போதுதான் அந்த மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web