ஈரானை விட்டு இந்தியர்கள் உடனே வெளியேற மத்திய அரசு உத்தரவு... பலி எண்ணிக்கை 2,500 கடந்தது.. அவசர எண்கள் அறிவிப்பு!
ஈரானில் அரசுக்கு எதிராகத் தொடங்கி நடைபெற்று வரும் போராட்டங்கள் தற்போது பெரும் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவோ அல்லது தாயகம் திரும்பவோ மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இதுவரை 2,572 பேர் உயிரிழந்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருவதால், ஈரானின் முக்கிய நகரங்கள் அனைத்தும் போர்க்களம் போலக் காட்சியளிக்கின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில், “ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள், தங்களுக்குக் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் ஈரானுக்குச் சுற்றுலா அல்லது தொழில் நிமித்தமாகப் பயணம் செய்ய வேண்டாம்.
ஈரானில் தங்கியுள்ளவர்கள் அங்குள்ள இந்தியத் தூதரகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். தங்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட குடியேற்ற ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். வெளியே வர முடியாத சூழலில் இருப்பவர்கள் உச்சபட்ச பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் போராட்டக் களங்களுக்கு அருகே செல்லக் கூடாது.

ஈரானின் முக்கிய விமான நிலையங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால், சர்வதேச விமானச் சேவைகள் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் அல்லது மாற்றியமைக்கப்படலாம். அவசர கால உதவிகளுக்கு ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர உதவி எண்களைத் திறந்து வைத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
