இயற்கை எரிவாயுவில் இயங்கும் 120 அரசுப் பேருந்துகள் - ஒப்பந்தம் கையெழுத்து!

 
இயற்கை எரிவாயுவில் இயங்கும்

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையிலும், இயங்கும் செலவைக் குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் மண்டலத்தைச் சேர்ந்த 120 அரசுப் பேருந்துகளை இனி இயற்கை எரிவாயு (CNG/LNG) மூலம் இயக்குவதற்காக ஒரு தனியார் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவர்களின் முயற்சிக்கு வித்திடும் வகையில், கடந்த ஆண்டு ராமநாதபுரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குக் சொந்தமான இரண்டு அரசுப் பேருந்துகளை டீசல் எஞ்சினில் இருந்து இயற்கை எரிவாயு பயன்படுத்தும் எஞ்சினாக மாற்றியமைத்துச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு

இந்தச் சோதனை ஓட்டமானது, சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு எந்தவிதமான தொழில்நுட்ப இடையூறும் இல்லாமல், மிக வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இந்தச் சோதனை ஓட்டத்தின் வெற்றிக்குப் பிறகுதான், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பெரிய அளவில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் முடிவுக்கு வந்துள்ளது. டீசலை விடச் சுற்றுச்சூழல் மாசு குறைவாகவும், செலவு குறைவாகவும் இருப்பதால், இந்த மாற்றத்தைச் செய்யப் போக்குவரத்துக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளது.

இந்தச் சோதனை ஓட்டத்தின் தொடர்ச்சியாகவே, தற்போது மொத்தமாக 120 அரசுப் பேருந்துகளை இயற்கை எரிவாயு எரிபொருள் மூலம் இயக்குவதற்காக ராமநாதபுரத்தின் ஏ.ஜி.பி. நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டலம் இடையே அதிகாரப்பூர்வமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்தப் பேருந்துகளும் டீசல் எஞ்சினில் இருந்து இயற்கை எரிவாயு எஞ்சின்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட உள்ளன.

இந்த ஒப்பந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தின் மேலாண்மை இயக்குநர் தசரதன், முதன்மை நிதி அதிகாரி சந்தானகிருஷ்ணன், பொது மேலாளர் சிங்காரவேலன், உதவி மேலாளர் கதிரவன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீல பேருந்து

இயற்கை எரிவாயு நிறுவனம் சார்பில் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து பூமாரி, துணை மண்டலத் தலைவர் அழகுராஜன், விளம்பரதாரர் பிரிவு துணைத் தலைவர் கார்த்திக் பாஸ்கரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். டீசல் பயன்பாட்டைக் குறைத்து, குறைவான மாசு ஏற்படுத்தும் இயற்கை எரிவாயுவிற்கு அரசுப் பேருந்துகளை மாற்றுவதன் மூலம், போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய பசுமைப் புரட்சிக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!