தமிழகம் முழுவதும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம்!!

 
கிராம சபை கூட்டம்

மே 1ம் தேதி திங்கட்கிழமை  உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மே தினம் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் இந்த தேதியில் அனைத்து கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

கிராம சபை கூட்டம்

அந்த சுற்றறிக்கையில் ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த  செய்திக்குறிப்பில் கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தப்படக் கூடாது. இடம், நேரம் இவைகளை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தண்டோரா மற்றும் மொபைல் குறுஞ்செய்தி மூலமாகவோ தெரியப்படுத்த வேண்டும்  என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டம்

அந்த வகையில், கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.அதனைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 1 ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கவும்,  கூட்டம்  குறித்த அறிக்கை மற்றும் தகவல்களை மே 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web