ஜனவரி 26ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்.. !

 
கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தி , சுதந்திர தினம், குடியரசு தினம் உட்பட குறிப்பிட்ட நாட்களில்   கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் குடியரசு தினத்தன்று தமிழகம் முழுவதும் கிராமங்களில்  கிராம சபை கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  குடியரசு தினத்தில்   அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில்  குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி காலை 11 மணிக்கு நடத்தப்படும்.

கிராம சபை கூட்டம்

இது குறித்த  அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி   உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  இந்த கூட்டத்திற்கு   எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி   மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டங்கள் மதச்சார்பற்ற இடங்களில் நடத்தப்பட வேண்டும்.  கிராம சபை கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும்.  அத்துடன் கிராம சபை கூட்டத்துக்கான செலவின வரம்பு ரூ5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web