பாலாற்றில் மயானக் கொள்ளை! ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்!

 
சிவராத்தி

தமிழகத்தின் வடமாவட்டங்களில் மகா சிவராத்திரிக்கு மறுநாளான நேற்று மயானக் கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பிரம்மனின் அகம்பாவத்தை அழிக்க அவனது ஒரு தலையை கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் போக்க கையில் கபாலம் ஏந்தி திரிந்த ஈசனின் தோஷத்தை பார்வதி அங்காளம்மனாக வந்து நிவர்த்தி செய்தார். இந்த கதையுடன் தொடர்புடைய மயானக் கொள்ளை திருவிழா நேற்று புகழ்பெற்ற வேலூரில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி, விருதம்பட்டு, மோட்டூர், கழிஞ்சூர், மக்கான் பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனின் தேர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

மயானக் கொள்ளை

அங்கு பாலாற்றங்கரையில் மண்ணால் தரையில் உருவாக்கப்பட்ட அங்காளம்மன் முன்பு சூறையாடல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டனர். மேலும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஏராளமானோர் காளி, காட்டேரி, முனீஸ்வரன், அனுமன் என பல்வேறு வேடங்கள் இட்டு ஆடி, பாடியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயானக் கொள்ளை

இவ்விழாவை காண வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் பாலாற்றங்கரையில் திரண்டனர். இதனால் பெரும் திருவிழா போன்று கொண்டாடப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web