அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது... ஈரான் கடும் எச்சரிக்கை!

ஈரான், இஸ்ரேல் போர் மிகக் கடுமையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 11-வது நாளாக நீடித்து வரும் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை உலக நாடுகள் அச்சத்துடன் கவனித்துவருகின்றன. இந்த பதற்றமான சூழ்நிலையில் நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் அணு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது,” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் முதல் கட்டமாக அமெரிக்க கடற்படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று IRGC அறிவித்தது. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் முக்கிய அணு உலைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் விளைவிக்கவில்லை. கதிரியக்க மாசு ஏற்படவில்லை என்றும் ஈரான் அணு ஆற்றல் அமைப்பு உறுதிப்படுத்தியது.
இருப்பினும், “அமெரிக்காவின் தாக்குதல்கள் எங்கள் அணு ஆராய்ச்சியை நிறுத்தாது,” என ஈரான் அணு ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு, ஈரான் ராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இந்தத் தாக்குதல் மிகக் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா தனது செயல்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ட்ரம்ப், நீங்கள் ஒரு சூதாட்டக்காரர். நீங்கள் இந்தப் போரைத் தொடங்கலாம், ஆனால் நாங்கள்தான் அதை முடிவுக்குக் கொண்டுவருவோம்,” என ஈரான் ராணுவத்தின் புரட்சிக் காவல்படை தளபதி ஹொசைன் சலாமி பகிரங்கமாக அறிவித்தார். ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் “உலக அமைதிக்கு அச்சுறுத்தல்” என்று கண்டித்து, அனைத்து தரப்பினரும் உடனடி பேச்சு வார்த்தைகளைத் தொடங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!