பெரும் பரபரப்பு... இந்து அமைப்பின் நிர்வாகி வெட்டி படுகொலை!

 
சுஹாஸ் ஷெட்டி

கர்நாடக மாநிலத்தில் மங்களூருவில்  பஜ்பே பகுதியில் பஜ்ரங் தள செயற்திட்டங்களுடன் தொடர்புடையவர்  ஹிந்து தலையங்கம் அமைப்பின் செயற்பாட்டாளர்  சுஹாஸ் ஷெட்டி. இவர் நேற்று மே 1ம் தேதி வியாழக்கிழமை  கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  

அடையாளம் தெரியாத நபர்கள் அவர் பயணித்த கார் மீது  மோதி   கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி அவரை கொலை செய்தனர். இச்சம்பவம் மத்திய கடலோர கன்னட மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  
இச்சம்பவத்தின் எதிரொலியாக , மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் மே 2 முதல் மே 6 வரை நகரத்தில் தடுப்புச் சட்டத்தை  அமல்படுத்தினார். அதாவது பொதுக்கூட்டங்கள், பேரணிகள், சமூக வலைதளங்களில் தூண்டுதலான பதிவுகள்  தடை செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?