பெரும் பரபரப்பு... வகுப்பறையில் இரும்பு மேஜை மீது தாக்கிய மின்னல்... 9 மாணவர்கள் படுகாயம் !

 
  பெரும் பரபரப்பு... வகுப்பறையில் இரும்பு மேஜை மீது தாக்கிய மின்னல்... 9 மாணவர்கள் படுகாயம் !   

ஜார்கண்ட் மாநிலத்தில் கோடெர்மா மாவட்டம் லால்காபானி கிராமத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த  கட்டடத்தின் மீது இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில், வகுப்பறையில் இருந்த 9 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். சம்பவ நேரத்தில் மாணவர்கள் வகுப்பில் இருந்தபோது, மின்னல் நேராக பள்ளி கட்டடத்தின் மீது தாக்கிவிட்டது.  
பள்ளி வளாகத்தில் இருந்த பெற்றோர் ” அந்தக் கட்டடம் ஆஸ்பெடாஸ் தகரக் கூரையால் கட்டப்பட்டதுடன், வகுப்பறைகளில் மாணவர்கள் பயன்படுத்தும் மேஜைகள் இரும்பால் செய்யப்பட்டிருந்ததால், மின்னல் நேராக மாணவர்களை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
படுகாயம் அடைந்த அனைத்து மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து  மருத்துவர்கள் தெரிவித்ததாவது, மாணவர்களின் உடல்நிலை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும், பெரிய ஆபத்துகள் இல்லை எனவும் கூறியுள்ளனர்.அந்த பள்ளியின் கட்டுமான பாதுகாப்பு, மின்னல் தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web