அதிர்ச்சி... விடுதியில் சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு உடல்நலகுறைவு!

 
ரங்காரெட்டி

தெலுங்கானா மாநிலத்தில் ரங்காரெட்டி மாவட்டம், குண்ட்லூர் பகுதியில்  தனியார் கல்லூரியில் இரவு உணவு சாப்பிட்ட  மாணவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, கல்லூரி விடுதியில்  வழங்கப்பட்ட ‘ஆலு குருமா’ மற்றும் ‘சப்பாத்தி’ உணவுகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு நள்ளிரவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரங்காரெட்டி

இதில் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் தொடர்ந்து வாந்தி எடுப்பதுடன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ உதவிக்காகவும் சென்றிருந்தனர். அந்த கல்லூரி வளாகத்தில் 800 முதல் 900 மாணவர்கள் வரை வசித்து வருகின்றனர்.  அதில் அதிகமான மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர், “நாங்கள் இதைப் பற்றிய தகவலைப் பெற்றுள்ளோம், ஆனால் கல்லூரி நிர்வாகம் உணவு சரியான முறையில் தயாரித்து வழங்கப்பட்டது தான் , நல்லதுதான் என கூறியுள்ளது. மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் எதுவும் புகார் அளிக்கவில்லை.

புகார் கிடைத்தால், தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.  தற்போது, உணவு விஷத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மாணவர்களின் உடல்நிலை கண்காணிப்பில் வைக்கப்பட்டு  வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web