பெரும் பரபரப்பு... விமானம் வீட்டின் மேல் விழுந்து பயங்கர விபத்து!

அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் சிமி வாலி பகுதியில், தனியார் விமானம் ஒன்று வீடுகளின் மேல் விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தில், விமானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த வீடுகளில் மக்கள் இருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Van’s RV-10 எனப்படும் இந்த விமானம், சிறிய வகையைச் சேர்ந்தது. வீடுகளுக்கு இடையே விழுந்த இந்த விமானத்தின் பல பாகங்கள் முறிந்து சிதறிவிட்டன. அதே நேரத்தில் தீப்பிடிக்க தொடங்கியதால் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டின் மேல் பகுதியில் புகை மூட்டம் காணப்பட்ட நிலையில் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரிய உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தவொரு உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!