பெரும் பரபரப்பு... தம்பதியர் கை, கால்களை கட்டிப் போட்டு 21 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்!

தமிழகத்தில் திருச்சி மாவட்டம், மணப்பாறை எம்.இடையபட்டியில் வசித்து வருபவர் மகாலிங்கம். 70 வயதான இவரது மனைவி கமலவேணி . இருவரும் தங்களது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த நாய் சப்தம் போட்டுக் கொண்டே இருக்கவே மகாலிங்கம் எழுந்து வந்து வீட்டிற்கு வெளியே ஒவ்வொரு புறமாக பார்த்துள்ளார்.
அப்போது ஒரு பகுதியில் மறைந்திருந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் மகாலிங்கத்தை தாக்கி அவரது கைலியை கிழித்து அதை கயிறு போல் மாற்றி கை மற்றும் கால்களை கட்டி போட்டு விட்டு அவரது மனைவியையும் செல்லோ டேப் மூலம் கட்டி வைத்து விட்டு கமலவேணி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையும், வீட்டில் பிரோவில் இருந்த 15 சவரன் என மொத்தம் 21 சவரன் நகையும், சுமார் 5000 பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
பின்னர் கட்டி இருந்ததை மகாலிங்கம் கடித்து அதை அகற்றிய பின் இதுகுறித்து போலீசாரிடம் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். வயதான தம்பதியை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!