பெரும் பரபரப்பு... வடவள்ளி சந்திரசேகர் அதிமுகவிலிருந்து திடீர் விலகல்!

 
அதிமுக
 


 
அதிமுகவில்  எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளராக இருந்தவர் வடவள்ளி சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பராக கருதப்படுகிறார்.  இவரது மனைவி சர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.  2022 ல் எல்.இ.டி விளக்குகள் வாங்கியதில் ரூ.500 கோடி ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்ட போது, வடவள்ளி சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். கடந்த சில மாதங்களாக வடவள்ளி சந்திரசேகர் அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில்  சந்திரசேகர் திடீர் என அ.தி.மு.க வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

அதிமுக


இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அ.தி.மு.க.வில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன். கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்துள்ளேன். அ.தி.மு.க கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பு இன்றி பணிபுரிந்துள்ளேன்.  மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன்.  கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே.  தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை  ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன். கட்சியில் இருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன்  எடுத்து இருக்கிறேன்.

இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!!
கட்சியில் எனக்கு  வாய்ப்பு அளித்த  அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற  ஊக்கம் தந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா , மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி யார்,  மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ். பி வேலுமணி ஆகியோருக்கு  சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணி புரிந்த கழகத்தின் நிர்வாகிகள்,  மூத்தவர்கள் மற்றும்  கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்... பிரிய மனமின்றி பிரிகிறேன். என்னை வாழ வைத்த அ.தி.மு.க.வின் அன்பிற்கு என்றும் நான் அடையாளமாக இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  
இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த வடவள்ளி சந்திரசேகர் அதிமுகவில் இருந்த விலகிய நிலையில், அவர் பாஜக அல்லது வேறு கட்சியில் இணைகிறாரா? என பேசப்பட்டு வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web