நெகிழ்ச்சி வீடியோ!! 23 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நாய்!!

 
துருக்கி

கடந்த மாதம் இதேநாள், அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி உலகமே அதிர்ந்தது. துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான நிலையில், இந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாடே குலுங்கியது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்துவிழுந்து தரைமட்டமாகின.இந்த கோரத்தில் துருக்கியில் 44,000 மேற்பட்டோர் மற்றும் சிரியாவில் சுமார் 6,000க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு மற்றும் புணரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

துருக்கி

சுமார் 2 லட்சம் கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், சுமார் 19 லட்சம் பேர் வசிப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5.3 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹதாய் பிராந்தியத்தில் உள்ள அந்தாக்யா என்ற பகுதியில், தன்னார்வல அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்ட போது ஹஸ்கி வகை நாய் குட்டி ஒன்று 23 நாள்களுக்குப் பின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. நாய்குட்டியை பார்த்த தன்னார்வளர்கள் அதை மீட்டு நீர், உணவுகளை வழங்கினர்.

துருக்கி

நாய் மீட்டு நலமுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மீட்கப்பட்ட நாய்க்கு அலெக்ஸ் என மீட்புகுழுவினர் பெயர் வைத்துள்ளனர். விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு ஒன்று அந்த நாய்யை தத்தெடுத்து கவனித்து வருகிறது. 23 நாள்கள் முறையாக சாப்பிடாததால் உடல் மெலிந்து காணப்படுவதாக கூறிய விலங்குகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
 


 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web