பெரும் சோகம்... 3ம் வகுப்பு மாணவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி... காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு 3 ம் வகுப்பு படித்து வந்த மாணவன் 8 வயது நிதின். இவர் மதிய உணவு இடைவெளியின் போது பள்ளியின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள விவசாய பாசனத்திற்காக நீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. அவனுடன் சென்ற மற்ற மாணவர்களின் கத்தி கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைமையாசிரியர் கவுரி சங்கர் ராஜா தண்ணீர் தொட்டிக்குள் குதித்து சிறுவனை மீட்க முயன்றுள்ளார். ஆனால் அவரும் வெளியே வராத நிலையில் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுவன், பள்ளி தலைமையாசிரியர் இருவரின் உடலையும் சடலமாக மீட்டனர்.
உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். சடலத்தை நீரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவனும், காப்பாற்ற சென்ற ஆசிரியரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!