பெரும் சோகம்... பராமரிப்பாளரை கடித்துக் குதறிய நாய்கள்... கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நொய்டாவில் நாய்கள் பாதுகாப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நாய்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு நாய் பராமரிப்பாளராக பணிபுரியும் ஒருவரை பிட்புல் நாய் மிகவும் கொடூரமான முறையில் கடித்து தாக்கி விட்டது.
இது குறித்து சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகை நாய்கள் பல சமயங்களில் உரிமையாளர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திவிடுகின்றன. அதேபோன்று அந்த பாதுகாப்பு நிலையத்தில் வேலை பார்த்தநபரின் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திய நிலையில் அவர் கத்தி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!