பெரும் சோகம்... திருமணமாகி 10 நாட்களில் கால்பந்து வீரர் கார் விபத்தில் பலி!

ஸ்பெயினின் ஜமோரா நகரில் ஏற்பட்ட கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா, அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) இருவரும் பரிதாபமாக பலியாகினர்.போர்ச்சுகல் எல்லைக்கு அருகில் மேற்குப்புற ஸ்பெயினின் சமோரா பகுதியில் நடந்த கார் விபத்தில் லிவர்பூல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் டியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா இருவரும் பரிதாபமாக பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா இருவரும் தங்களது சொகுசு லம்போர்கினி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயற்சித்த போது, இவர்களின் காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
சாலையில் இருந்து பல அடி தூரம் உருண்ட இவர்களது கார் பின்னர் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தும் இவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இதில், சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அட்லெடிகோ மாட்ரிட், எஃப்சி போர்டோ மற்றும் வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார் பிரீமியர் லீக், எஃப்ஏ கோப்பை மற்றும் இரண்டு கரபோ கோப்பைகளையும் வெல்ல உதவினார். ஜோட்டாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜூன் 22ம் தேதி திருமணம் நடந்தது. இவர் தனது சிறுவயது காதலியான ரூட் கார்ட்சோவைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திருமணமான 10 நாட்களில் கால்பந்து வீரர் கார் விபத்தில் பலியான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!