பெரும் சோகம்... ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழிறங்கிய லோகோ பைலட் மாரடைப்பால் மரணம்!

பெரும் சோகமாக ரயில் நிலையத்தில் சென்று சேரும் இலக்கை அடைந்ததும் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி விட்டு கீழிறங்கியதும் லோகோ பைலட் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரயில் நிலைய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 12.12 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து அதிகாலை 12.45மணிக்கு பயணிகள் அனைவரையும் இறங்கி விட்டு விட்டு காலி பெட்டிகளுடன், ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் சென்றடைந்தது.
அந்த ரயிலில் லோகோ பைலட் மோகனன் என்பவருடன், பிரதீப் என்பவர் உதவி லோகோ பைலட்டாக பணியில் இருந்தார். ரயிலை நிறுத்தி விட்டு மோகனன் ரயிலில் இருந்து கீழே இறங்கிய நிலையில் பிரதீப் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரயில் இன்ஜின் அறையில் மயங்கி சரிந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பிரதீப்பைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!