பெரும் சோகம்... தந்தை இறந்த செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்!

 
மசூதி இறுதிசடங்கு
தந்தை இறப்பு செய்தி கேட்ட அதிர்ச்சியில் மகன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இருவரது இறுதிச்சடங்கு ஒன்றாக நடைப்பெற்ற சமப்வம் கான்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட மகன், தந்தையின் இறப்பு செய்தி கேட்டு தாங்க முடியாமல் தவித்தார். அதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களை கண்கலங்க வைத்துள்ளது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், பின்னர் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட அவரது மகன் அதிக் மருத்துவரின் மரண அறிவிப்பை ஏற்க முடியாமல் வேறு ஒரு இதய சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்
அந்த மருத்துவர்களும் லைக் அகமதுவின் மரணத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். அவரது உடலை ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற போது மகன் அதனை பின்தொடர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். துக்கம் தாளாமல் பின்தொடர்ந்து வந்த மகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலே சரிந்து விழுந்திருக்கிறார். உள்ளூர் வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறி இருக்கின்றனர்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் தந்தை மகன் இருவரின் இறுதிச்சடங்களும் ஒன்றாக நடைபெற்றது. லைக் அகமதுவின் இரண்டு மகன்களில் இளையவரான அதிக், தனது தந்தையுடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருப்பார் என்று குடும்ப உறுப்பினர்கள் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவம் குடும்பத்தினர்கள் மத்தியில் கிராமவாசிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web