பெரும் சோகம்... வளர்ப்பு பூனை இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை!

இதில் மேலும் அதிர்ச்சியாக உயிரிழந்த பூனை, தன்னைத் தேடி உயிரோடு மீண்டும் வந்து விடும் என்று நினைத்து இரண்டு நாட்களாக அந்தப் பெண் மன அழுத்தத்துடன் பூனைக்காக காத்திருந்துள்ளார்.
நாம் வீட்டில் பாசமாக வளர்க்கும் செல்லப்பிராணிகளை பெரும்பாலானோர் குடும்பத்தில் ஒரு நபராகவே தான் கருதி வளர்க்கிறோம். அவை நமக்கு மகிழ்ச்சியும், ஆறுதலும் மற்றும் நிபந்தனையற்ற அன்பையும் தருகின்றன. ஆனால் அவை நம்மைவிட்டு பிரிந்து செல்லும்போது, அந்த துக்கத்தை தாங்க முடியாது.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் வசித்து வரும் 32 வயதான பூஜாவுக்கு, தனது செல்லப் பூனையின் மரணம் தாங்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியாகவும் பேரிடியாகவும் இருந்தது. இதனால் அவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவிற்கு தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளார்.
பூஜாவின் வளர்ப்பு பூனை கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. இறந்த பூனையின் உடலை தன் கைகளில் ஏந்திக் கொண்டு, அது மீண்டும் உயிர் பெறும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார் பூஜா. அவருடைய தாயும் அவருடைய குடும்பத்தினரும் பூனையை அடக்கம் செய்ய பூஜாவை சமாதானப்படுத்தினர்.
ஆனால் பூஜா யார் சொல்வதையும் கேட்கவில்லை. ஒருபோதும் நடக்காத ஒரு மந்திரம் அதிசயம் நடக்கும் என 2 நாட்களாக பூனை மீண்டும் உயிர்த்தெழும் என்று எதிர்பார்த்து காத்திருந்து, பூனையின் உடலை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்துள்ளார்.
நேரம் செல்ல செல்ல, பூஜா நம்பிக்கை இழக்க தொடங்கினாள். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அவள் தனது வீட்டின் 3 வது மாடியில் உள்ள ஒரு அறையில் பூனையுடன் கதவைப் பூட்டிக் கொண்டாள். மகள் எந்த நிலைமையில் இருக்கிறாளோ எனக் கவலைப்பட்ட அவருடைய தாய் இரவு 8 மணியளவில் பூட்டிய அறையின் கதவை திறந்துள்ளார். அங்கு பூஜாவின் உயிரற்ற உடல் மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகிலேயே உயிரற்ற செல்லப் பூனையும் கிடந்தது.
பூஜாவின் தாயாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, சிறிது நேரத்தில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பூஜாவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, பூஜாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!