பெரும் சோகம்... 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்து... 4 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி!

 
சித்து கிஷன்


 
கர்நாடக மாநிலம் கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா - தெல்கூர் சாலையில், ஒரே சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் எதிரெதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்தன. இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

சித்து கிஷன்  

இதில், இருசக்கர வாகனங்களில் வந்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேடம் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினர். 

விபத்து

முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள், ஹபாலா கிராமத்தில் வசித்து வரும் 20 வயது மல்லிகார்ஜன்,   சித்து கிஷன் , தெல்கூர் கிராமத்தில் வசித்து வந்த பிரகாஷ் (19), சுரேஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நான்கு பேரும் உயிரிழந்து   விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் ஹபாலா, தெல்கூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web