பெரும் சோகம்... பழைய கட்டடம் தீப்பிடித்து எரிந்ததில் காவலாளி உடல் கருகி பலி!

கேரள மாநிலம் பாலக்காட்டில் வசித்து வருபவர் மாணிக்கம். 71 வயது . முதியவரான இவர், சென்னை தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் அப்போலோ குழுமத்திற்குச் சொந்தமான பழமையான கட்டடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் தங்கி இருந்த அறை திடீரென தீப்பிடித்து எரிந்ததுள்ளது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காவலாளி மாணிக்கம் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தீக்காயத்துடன் இறந்து கிடந்த அவர், தீ விபத்தில் இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிகரெட் பிடித்துக் கொண்டே மாணிக்கம் படுத்து உறங்கிய போது பஞ்சு மெத்தை எரிந்து தீ விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!