பெரும் அதிர்ச்சி... மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 53 பேர் ரத்த வாந்தி எடுத்து பலி... அறிகுறிக்கு பிறகு 48 மணி நேரம் வரை தான் உயிர் இருக்கும்’..!!

உலக சுகாதார அமைப்பு இது குறித்து பிப்ரவரி 16ம் தேதி ஈக்வடேர் மாகாணத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் உட்புற இரத்தப்போக்கு ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான நோயாளிகள் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்து விடுகின்றனர்.
பிகோரோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் செர்ஜ் நாகலேபாடோ இது குறித்து, அறிகுறிகளுக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள மிக மிகக் குறுகிய இடைவெளி ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாட்களுக்குள் வேகமாக அதிகரித்து வரும் இந்த தொற்றுநோய்கள், பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த மர்மமான நோயில் “ரத்தக்கசிவு காய்ச்சல்” அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவை பொதுவாக எபோலா, டெங்கு, மார்பர்க் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய வைரஸ்களுடன் தொடர்புடையவை ஆகும். இருப்பினும், சோதனைகளை நடத்திய பிறகு விஞ்ஞானிகள் இந்த அறியப்பட்ட வைரஸ்கள் தான் இதற்கான காரணம் என்பதை அறிய முடிந்தது. இதனால் நோயின் சரியான தோற்றம் மற்றும் தன்மை இன்னும் தெரியவில்லை. பலரும் இது கொரோனா வைரஸாக இருக்கலாமோ என நினைத்துக் கொள்கின்றனர்.அதை போன்ற அறிகுறிகள் கொண்ட காலநிலை காய்ச்சலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், ரத்த வாந்தி எடுப்பதுதான் உலக சுகாதார மையத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!