பெரும் அதிர்ச்சி... கல்லூரி மாணவி மர்ம மரணம்!

கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் தன்யா தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி உயர்படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார்.
We are saddened by the sudden demise of Ms. Tanya Tyagi, an Indian student at University of Calgary. The Consulate is in touch with the authorities and will provide all required assistance to the bereaved family. Our heartfelt condolences & prayers are with his family & friends…
— India in Vancouver (@cgivancouver) June 19, 2025
இவர் ஜூன் 17ம் தேதி மர்மமான முறையில் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து கனடாவுக்கான இந்திய துணைத் தூதரகம் கால்கரி பல்கலைக்கழக இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மறைவால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்.
இவரது திடீர் மறைவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர். பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகளை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!