பெரும்சோகம்... மழைவெள்ளத்தில் 10,000 கோழிகள் பரிதாபமாக உயிரிழப்பு!

 
கோழிகள்

தென்மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த இரு தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கோழிப் பண்ணைக்குள் நீர் புகுந்து, பரிதாபமாக 10,000க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. 

செங்கல்பட்டு மாவட்டத்திலும் கடந்த இரு தினங்களாக மதுராந்தகம், செய்யூர், இடைக்கழிநாடு, அணைக்கட்டு மற்றும் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கோழிகள்

இதனால் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேருராட்சி, வேம்பனுார் கிராமத்தில் இயங்கி வரும் பல கோழிப் பண்ணைகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இதில், தண்ணீரில் மூழ்கி அப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. இதனால் கோழிக்குஞ்சு, தீவனம், தடுப்பூசி, தேங்காய்ப் பஞ்சு, வேலை ஆட்கள் கூலி என சுமார் 20 லட்ச ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோழிப்பண்ணை

எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனே இங்குள்ள கோழிப் பண்ணைகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web