பெரும் சோகம்... 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

 
 அனுஷ்கா

தமிழகத்தில் திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி அருகே திருமேனிஏரி கிராமத்தில் வசித்து வருபவர்கள்  ஐயப்பன் - மீனா தம்பதியின் மகள் அனுஷ்கா. 12 வயதாகும் இவர்  8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் வீட்டில் இருந்த அனுஷ்கா மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார்.

அப்போது திடீரென  சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அனுஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?