பெரும் சோகம்.. கடலில் படகு கவிழ்ந்து அகதிகள் 27 பேர் உயிரிழப்பு !

 
ஆப்பிரிக்க நாடு

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். கடல் வழியாகவும், சாலை வழியாகவும் செல்கின்றனர். ஆனால் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. அப்போது உயிரிழப்புகளும் ஏற்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

ஆப்பிரிக்க நாடு

அவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்டவிரோத பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் திடீரென கடலில் கவிழ்ந்தன. 

இந்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல் படையினர் கப்பலில் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். கடலில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர். 

ஆப்பிரிக்க நாடு

இந்த விபத்தில் மேலும் பலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!