பெரும் சோகம்... பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி... தாய், தந்தை,சகோதரியை இழந்து தவிக்கும் சிறுவன்!

 
பெரும் சோகம்... பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...  தாய், தந்தை,சகோதரியை இழந்து தவிக்கும் சிறுவன்!

 
தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர்   ரவீந்தர் . இவர் தனது குடும்பத்துடன் கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றுள்ளார். அந்த காரில் அவரது மனைவி ரேணுகா  , மகள் ரிஷிதா (8) மற்றும் மகன் ரிஷிகிருஷ்ணா (6) ஆகியோரும் உடன் பயணம் செய்தனர். இந்நிலையில் பிபி குடேம் அருகே சூர்யாபேட்டை பகுதியில் வைத்து எதிரே வந்த அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர்  மோதிக் கொண்டதில், கார் முற்றிலுமாக  நொறுங்கியது. 

விபத்து

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  காயமடைந்தவர்களை மீட்டு சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், ரவீந்தர், ரேணுகா மற்றும் ரிஷிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து

பேருந்தில்  பயணம் செய்தவர்கள்  உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?