பெரும் சோகம்..!! ஹோலி கொண்டாட்டத்தில் 5 பேர் பரிதாப பலி !!

 
ஹோலி

வடஇந்தியா முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை தூவியும், மலர்களை வீசியும், துள்ளல் நடனத்துடன் பண்டிகையை கொண்டாடி தீர்த்தனர். இதேபோல் பல்வேறு மாநிலங்களில் பணிசெய்து வரும் வடஇந்தியர்களும் ஹோலியை கொண்டாடினர். 

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அணில் (12), சந்தோஷ் (13), வீர ஆஞ்சநேயுலு (16) ஆகிய மூவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அவர்கள் மீது வண்ண பொடிகள், கலவை தண்ணீர் ஊற்றப்பட்டதால் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு குளிக்க முடிவுசெய்தனர். இதற்காக அருகேயிருந்த மானேரு நதிக்கு சென்று குளித்தனர். 

ஹோலி

அப்போது மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீண்ட நேரத்துக்கு பிறகு மூன்று பேரின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் அமைச்சர் கமலாகர் தனது சொந்த செலவில் தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஹோலி

இதேபோல் நாகர்கர்னூல், விகாராபாத் மாவட்டம், மால் ரெட்டி பல்லி பகுதியில் ஏரியில் குளிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web