பெரும் சோகம்.. அள்ள அள்ள பிணம்.. பலியானவர்களின் எண்ணிக்கை 15000யைக் கடந்தது! கதறுது உலகம்!

 
சிரியா

திரும்பும் இடங்களில் எல்லாம் மரண ஓலம். இடிபாடுகளை அகற்றுகிற பக்கங்களில் எல்லாம் பிண குவியல்கள். சிரியாவின் நிலநடுக்கத்தைப் பார்த்து கதறுகிறது உலகம். இந்த வாரத் தொடக்கத்தில் துருக்கி- சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களினால், நகரங்களில் உள்ள பெரும்பாலான  கட்டிடங்கள் சரிந்து  விழுந்தன. எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடுங்குளிர் சீதோஷ்ண நிலையால், மீட்பு பணியும் தொய்வுடனே நடைப்பெற்று வருகிறது.

துருக்கி

உலகம் முழுவதிலும் இருந்தும் நிறைய நாடுகள் ஈடுபட்டுள்ளன.  இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் மட்டும் 12391 பேரும்,  சிரியாவில் 2992 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

50,000க்கும்  அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தோண்டத் தோண்ட சடலங்கள் குவிந்து கொண்டே செல்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நேட்டோ தலைமையகத்தில், நேட்டோ  நாடுகளின் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்தும் பேரிடர் மீட்பு படையினர், மருத்துவர்கள்  குழு துருக்கிக்கு விரைந்துள்ளது. அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

துருக்கி

துருக்கியின் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் பதிவான மிக மோசமான நிலநடுக்கமாக இதுவாக  பதிவாகியுள்ளது.  7.8 ரிக்டர்  ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்  துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் சரிந்தன. 11000 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கிய கானா கால்பந்து வீரர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.  இந்த நிலநடுக்க இடிபாடு மீட்பு பணிகளில் பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. வடக்கு சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொண்ட  7 வயது சிறுமி, 30 மணிநேரம் வரை தனது சகோதரனை காப்பாற்ற போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மரியம் என்ற சிறுமி, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுத்த நிலையில் இருக்கிறார்.

அவருக்கு அருகே சிறுமியின் சகோதரன் படுத்து கிடக்கிறான். இருவராலும் ஒரு இன்ச் கூட  நகர முடியவில்லை. சகோதரன் மீது தூசு உள்ளிட்ட எதுவும் விழுந்து விடாமல் இருக்க தலையில் கையை வைத்து சிறுமி போர்த்தியுள்ளார்.  சிமெண்ட் சிலாப்புகளுக்கு கீழே சிக்கியிருந்த 2 பேரும் 30 மணிநேரம் வரை போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும்  மீட்பு குழு மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.  சமூக வலைதளங்களில்  இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிரியாவில் மற்றொரு சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த, தொப்புள்கொடியுடன்  புதிதாக பிறந்த குழந்தை ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டது. எனினும், நிலநடுக்கத்தில் குழந்தையின் தாய் உயிரிழந்து விட்டது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web