பெரும் சோகம்.. பெண் தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை.. பகீர் பின்னணி!

 
மணிமேகலை

விழுப்புரம் அருகே கஞ்சனூர் பகுதியில் நடராஜன் (40) - மணிமேகலை (39) தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 2014ஆம் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். மணிமேகலை கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஜெயகவுரி நகரில் வாடகை வீட்டில்வசித்து வந்தார். 

 நடராஜன் - மணிமேகலை தம்பதிக்கு மிதுன்சாய், நித்தேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் நலன்காக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் மணிமேகலை பணி புரிந்து வந்தார்.

மணிமேகலை

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி காலை வீட்டில் இருந்த மணிமேகலை, திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்டதும் கணவன் நடராஜன் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மணிமேகலை

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக மணிமேகலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web