முதலிரவில் அதிர்ச்சி... மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, கணவனும் தற்கொலை!

 
பிரதீப்

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  அயோத்தி நகரின் கான்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாதத் கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர்  பிரதீப். இவருக்கும்   ஷிவானிக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அன்றைய தினம் மணமகனின் வீட்டிற்கு தம்பதிகள் சென்றனர். அங்கு திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகள் நடைபெற்றன.  அன்றிரவே  முதலிரவுக்காக மணமகனும், மணமகளும் தங்களது அறைக்குச் சென்றனர்.

5வது திருமணம்
அடுத்த நாள் காலை புதுமணத் தம்பதியினர் படுத்திருந்த அறைக் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவே இல்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், புதுமணத் தம்பதியினர் படுத்திருந்த அறையின் கதவை பலமுறை தட்டியும் எவ்வித பதிலும் இல்லை. அதனால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, ​​படுக்கையில் இறந்த நிலையில் புதுப்பெண் ஷிவானியின் உடலும்  மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதீப்பின் உடலும் மீட்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த   போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜ் கரண் நாயர் கூறுகையில், 'திருமணமான புதுமணத் தம்பதிகள், அன்றிரவு பழக்கவழக்கத்தின் படி முதலிரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்கொலை

ஆனால் புதுமணத் தம்பதிக்குள் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அறையின் கதவு உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன.  தற்போது இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.  

திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தொடர்பான பிரச்னையா? அல்லது வேறு ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரு தரப்பு பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்' எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web