பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய பெரும் சோகம்!! சாலை விபத்தில் பலி!!

 
ரஞ்சித்குமார்

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு பயின்றார். கடந்த 8ஆம் தேதியன்று ரஞ்சித்குமாரின் பிறந்தநாள் என்பதால் நண்பருடன் கொண்டாடியுள்ளார். 

அப்போது ரஞ்சித் வீட்டின் அருகே உள்ள நண்பர்களான சுந்தர், கௌதம் ஆகியோர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்து விட்டு, ரஞ்சித்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்வகையில் திட்டமிட்டனர். இதனால் ரஞ்சித்தை தேடி கல்லூரிக்கு சென்றுள்ளனர். 

ரஞ்சித்குமார்

அதன்படி கல்லூரிக்கு சென்றுவிட்டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர்களான கௌதம் சுந்தர் ஆகியோர் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்களது பைக் விபத்தில்  சிக்கியது.

இதில் மூவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் மற்றும் கௌதம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் உடன் சென்ற மற்றொரு மாணவர் சுந்தர் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

ரஞ்சித்குமார்

பின்னர் உடற்கூராய்வுக்காக இரண்டு மாணவர்களின் உடல்களும் சேலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.  ரஞ்சித் மற்றும் கௌதம் உடன் பயின்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை குவிந்தனர். மாணவன், பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் நிலையில் விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!