பெரும் சோகம்... பணி ஓய்வு பெறும் கடைசி நாளே இறப்பு நாளாக மாறிய கொடூரம்... கதறித் துடிக்கும் குடும்பத்தினர்!

பெரும் சோகம்... பணி ஓய்வு பெறும் கடைசி நாளே இறப்பு நாளாக மாறிய கொடூரம்... கதறித் துடிக்கும் குடும்பத்தினர்! 

ஜார்கண்ட் மாநிலத்தில் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா ரயில்வே லைனில் ஆலைகளுக்காக தனியாரால் இயக்கப்படும் ரயில்வே தடத்தில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் மற்றோரு சரக்கு ரயில் மீது மோதியது. பார்கத் எம்டி ரயில் நிலையத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. 

பெரும் சோகம்... பணி ஓய்வு பெறும் கடைசி நாளே இறப்பு நாளாக மாறிய கொடூரம்... கதறித் துடிக்கும் குடும்பத்தினர்! 

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 ரயில்வே பணியாளர்கள், 4 CISF படைவீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து நடத்திய விசாரணையில் 2 ரயில்களுக்கும் இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் நிலக்கரி ஏற்றி வந்த ரயிலின் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால். இவர் மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் வசித்து வருபவர். இவர் நேற்றைய தினத்துடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தனது கடைசி பயணத்தில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பெரும் சோகம்... பணி ஓய்வு பெறும் கடைசி நாளே இறப்பு நாளாக மாறிய கொடூரம்... கதறித் துடிக்கும் குடும்பத்தினர்! 

நேற்றைய பணி முடிந்ததும் இரவில் ஓய்வு பெறுவதால் வீட்டில் விருந்து ஏற்பாட்டில் கலந்து கொள்ள இருந்தார். எதிர்பாராதவிதமாக நடந்த அசம்பாவிதத்தால் கங்கேஸ்வர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கங்கேஸ்வர் குடும்பத்தினர் கடைசியாக கங்கேஸ்வர் தான் சீக்கிரம் வந்து விருந்தில் கலந்து கொள்வதாக போனில் கூறினார்.ஆனால் தற்போது தங்களின் மொத்த உலகமும் நொறுங்கிவிட்டதாக, தங்களது வருத்தத்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web