பெரும் சோகம்.. அஜாக்கிரதையால் எந்திரத்தில் சிக்கி இளம்பெண் மரணம்!

 
வனிதா

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின். இவர், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கீழப்பனையூர் கிராமத்தில் தரையில் பதிக்கும் கற்களான ஹாலோ பிளாக் தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அங்கு ஆலையும் செயல்பட்டு வருகிறது.

இங்கு கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்த வனிதா( 43) என்பவர் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து கலவை எந்திரத்தை வனிதா சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கலவை எந்திரத்தில் அவர் சிக்கிக் கொண்டார்.

வனிதா

இதில் பலத்த காயம் அடைந்த வனிதாவை, அங்கு இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனை  கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.  இது குறித்து புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனிதா

கலவை எந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

     

From around the web