பெரும் சோகம்.. இளம் இயக்குநர் மரணம்! இன்று மாலை இறுதிசடங்குகள் நடைபெறும்!

 
மனு ஜேம்ஸ்

மலையாள திரையுலகின் இளம் இயக்குனர் மனு ஜேம்ஸ் (31) உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து குறும்படங்களை இயக்கிவந்த மனு ஜேம்ஸ், தனது முதல் படமாக 'நான்சி ராணி' என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரிலீஸுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கு முன்பு காலமானார்.  இயக்குனர் மனு ஜேம்ஸ் ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பெற்று வந்தார். 

மனு ஜேம்ஸ்

அஹானா கிருஷ்ணா, சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் ஆகியோர் நடிப்பில், இயக்குனர் மனு ஜேம்ஸ் 'நான்சி ராணி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் இருந்தது.

இயக்குனர் மனு ஜேம்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு, குழந்தை நடிகராக 'ஐ ஆம் க்யூரியஸ்' திரைப்படத்தில் நுழைந்தார். பின்னர் அவர் மலையாளம் மற்றும் கன்னடம் மற்றும் பாலிவுட்டில் உதவி இயக்குனர் தனது திரைபயணத்தை தொடர்ந்தார்.

மனு ஜேம்ஸ்

இவரது மனைவி நைனா மனு ஜேம்ஸ். மனு குறவிலங்காட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜோசப் மற்றும் சிசிலி ஜேம்ஸ் ஆகியோரின் மகன். இறுதிச் சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை  குறவிலங்காட்டில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web