பெரும் சோகம்...பிரபல நடிகரின் கார் விபத்து ....3 பேர் படுகாயம் , 6 வாகனங்கள் அடுத்தடுத்து சேதம்!
தமிழ் திரையுலகில் பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இந்தியன்2 படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் பாபி சிம்ஹா . இவரிடம் டிரைவராக பணிபுரிந்து வந்தவர் புஷ்பராஜ். இவர் பாபி சிம்ஹாவின் தந்தையை வீட்டில் விட்டுவிட்டு கிண்டி கத்திப்பாரா அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறை படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, புஷ்பராஜூடன் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வாகனம் இயக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் டிரைவர் புஷ்பராஜை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
