வெயில் காலங்கள் வியர்க்குருவில் இருந்து தப்பிக்க அருமையான வழிமுறைகள்!

கோடை காலம் வந்தாலே பல சவால்கள் குறிப்பாக விடாத வியர்வை துரத்திக் கொண்டே இருக்கும். காலை முதல் மின்விசிறிகள் சுற்றிக்க்கொண்டே இருந்தாலும் வியர்வை பிசுபிசுப்பு இருந்து கொண்டே இருக்கும். வியர்வைசுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் எண்ண முடியாத அளவில் இருக்கின்றன. இதில் கால் பாதத்தில் தான் மற்ற இடங்களைத் தவிர சற்று அதிகமாக இருக்கின்றன.
உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, பெண்களின் பிறப்புறுப்பு, ஆண்களின் பிறப்புறுப்பு, இந்த இடங்களில் மட்டும் தான் வியர்வை சுரப்பிகள் இல்லை. ஒரு நாளைக்கு சுமார் அரை லிட்டரிலிருந்து, முக்கால் லிட்டர் வரை வியர்வை நீர் உடலிலிருந்து வெளியேறுவதுண்டு. சிலருக்கு எவ்வளவு அதிகமான வெயிலில் நின்றாலும் வியர்வையே வராது . சிலருக்கு குளித்துவிட்டு வந்ததுபோல் அதிகமாக வியர்த்துக் கொட்டும் உடலின் வெப்ப நிலையை பராமரித்து, காப்பவை வியர்வைச் சுரப்பிகள் உடலின் உள் வெப்பம் அதிகமானால், உடனே வியர்வை சுரப்பிகள் நீரை உடலிலிருந்து தோலின் மேல் பகுதிக்கு வியர்வையாக வெளியேற்றும்.
தோலின் மேல் பகுதிக்கு வந்த வியர்வை நீர் உடனே ஆவியாகிவிடும். இவ்வாறு தலையிலிருந்து கால் வரை உடல் முழுவதும் , வியர்வை தோலின் மேல் பகுதிக்கு வந்து ஆவியாகி வெளியேறும் போது, தோலுக்கு கீழே இருக்கும் அடித்தோலும், அதோடு சேர்ந்திருக்கும் ரத்தக்குழாயும், ரத்தமும் குளிர்ந்துபோய்விடும். இப்படித்தான் உடலின் வெப்ப நிலை எப்பொழுதும் சீராக தக்கவைக்கப்படுகிறது. இந்த முறையை தான் 'வெப்ப நிலை சீரமைத்தல்" என்கின்றனர்.
சிலருக்கு வெயில் காலம் வந்தாலே, வியர்க்குரு அள்ளிக் கொட்டினாற்போல் உடம்பெல்லாம் வந்துவிடும். உடலிலுள்ள தோலின் மேற்புறத்தில் சிறுசிறு கொப்புளங்களாகத் தோன்றி, சொரிந்தால் எரிச்சலையும் , வலியையும் , அரிப்பையும் கொடுக்கும். தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக வியர்வை வரும் வேலைகளைச் செய்வது, இறுக்கமான ஆடைகளை அணிவது, புழுக்கமான, காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக நேரம் இருப்பது இவைகளால் வியர்க்குரு உண்டாகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வியர்க்குரு பாடாய்ப்படுத்தும் .
உடலில் வந்த வியர்க்குரு நிறைய பேருக்கு எந்தவித சிகிச்சையுமின்றி தானாகவே மறைந்துவிடும் ஆற்றலுடையது. வெகு சிலருக்கு எரிச்சலையும் அசௌகரியத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி விடும்.
வெயில் காலத்திற்கும், வியர்க்குரு காலத்துக்கும் அருமருந்து பழங்கள் தான்.
இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழங்களை வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாம்.
பனைநுங்கு மிகமிகச் சிறந்த மருந்து. அதிக அளவில் இதை சாப்பிடலாம்.
வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றுமே வியர்க்குருவுக்கு மிகச் சிறந்த கிருமி நாசினி . இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து, மையாக அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்கள் முழுவதிலும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தேய்த்து ஒரு மணி நேரம் ஊற விட்டு, பின் குளிக்கலாம்.
ஆண்களை பொறுத்தவரை வெறும் சந்தனத்தைக்கூட உடலெங்கும் தேய்த்துக் கொள்ளலாம்.
வழக்கமாக குடிப்பதைவிட, சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கதர் ,பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.
கற்றாழைச் சாறு தடவலாம்.
ஐஸ் கட்டிகளை துணியில் கட்டி வைத்து வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால், எரிச்சல், அரிப்பு குறைந்து போய்விடும்.
காற்றோட்டமான இடங்களில் இருந்தால் எரிச்சல் அடங்கி விடும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!