எடப்பாடிக்கு எதிராக கட்டம் கட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை !! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
லஞ்ச ஒழிப்புத்துறை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா நெருக்கடி சற்று தணிந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளை நடத்தியது. பல மாஜி அமைச்சர்களின் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதில் கட்டுகட்டாக பணம், நகை, பல்வேறு ஆவணங்கள் சிக்கியது. யாரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை

ஆனால் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்று சில நாள்களே ஆன நிலையில் தற்போது அவர் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த 2017 - 2021 காலகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறப்படுகிறது. இது கூறி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை கேட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை

இந்நிலையில் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரிய நிலையில், தமிழக அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web