மனைவி பிரிந்ததால் சோகம்... படியில் குழந்தையை அமர வைத்துவிட்டு தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை!

மனைவி பிரிந்து சென்றதாலும், தனது 3 வயது குழந்தை தாய் இல்லாமல் சிரமம் அடைந்து வருவதையும் பார்த்து அவர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் நேற்று தனது குழந்தை சுபஸ்ரீயுடன் ஊரிலிருந்து மாயமானார். இருவரையும் குமாரின் தந்தை மாரியப்பன் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வந்தனர். அத்துடன் குமாரின் உறவினர்கள் அவர் ஏதேனும் வயல்வெளியில் தனிமையில் இருக்கிறாரா? என மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடிக் கொண்டிருந்தனர். கிணற்றுப்படியில் குழந்தை அழும் சப்தம் கேட்டு குமாரின் உறவினர்கள் சென்றனர். அப்போது குழந்தை சுபஸ்ரீ மட்டும் தனியாக அழுது கொண்டிருந்தைப்பார்த்து அவர்கள் குழந்தையை மீட்டுள்ளனர்.
அருகில் உள்ள கிணற்றில் தேடிப் பார்த்த போது உயிரிழந்த நிலையில் சடலமாக ஒரு உடல் கிடந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்குச் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விரக்தியில் தற்கொலை செய்ய குழந்தையுடன் கிணற்றுக்குச் சென்ற குமார் கடைசி நேரத்தில் மகளை படியில் வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!