க்ரோக் ஏஐ ஆபாச சர்ச்சை…அறிக்கை சமர்ப்பிக்க எக்ஸ் தளத்திற்கு இன்று வரை அவகாசம்!
எக்ஸ் சமூக ஊடகத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான க்ரோக்-ஐ பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. க்ரோக் ஏஐ-யில் போதிய கட்டுப்பாடுகள் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் சட்டவிரோத உள்ளடக்கங்கள் பரவுவதாக பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ கடுமையாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு எக்ஸ் தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. க்ரோக் மூலம் ஆபாச, சட்டவிரோத உள்ளடக்கம் உருவாவதைத் தடுக்க கட்டமைப்புகள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. விதிகளை மீறும் பயனர்களின் கணக்குகளை முழுமையாக முடக்க வேண்டும் என்றும், 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தர வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த எக்ஸ், க்ரோக் ஏஐ-யை தவறாக பயன்படுத்துவோர் கடும் விளைவுகளை சந்திப்பார்கள் என தெரிவித்தது. ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்குவது, அந்த கணக்குகளை நிரந்தரமாக முடக்குவது, அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது என அறிவித்தது. அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், இன்று வரை மத்திய அரசு அவகாசத்தை நீட்டித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
