மணமகன் கைது.. வைரலாகும் திருமண போஸ்டர்! செஞ்சியில் பரபரப்பு!

 
திருமண போஸ்டர்

மணமகன் கைது என்று வித்தியாசமாக திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று நண்பர்கள் செய்த போஸ்டர் விளையாட்டு, மணமகனுக்கு சொந்தக்காரர்கள் மத்தியில் பெரும் திட்டையும், பலத்த கண்டனங்களையும் பெற்று தந்திருக்கிறது. திருமணத்திற்கு வாழ்த்த வந்திருந்த உறவினர்கள் அத்தனைப் பேரும் மணமகனைத் திட்டி, அட்வைஸ் செய்து விட்டு சென்றனர். திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்   என்பது பழமொழி. அதற்கேற்ப பல முறை போய் பார்த்து விசாரித்து படாத பட்டு திருமணத்தை நடத்திய காலமெல்லாம் மலையேறி போச்சு . இன்றைய தலைமுறை திருமணத்தை ஒரு கொண்டாட்டமாகவே பார்த்து வருகிறது. முடிந்த வரை என்ஜாய் பண்ணு. சந்தோஷமா இரு. நினைச்சத செய் என்பது தான் இளைய தலைமுறையின் ஒருமித்த கருத்து.

5வது திருமணம்

அதிலும் திருமண மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள்,  மணமகன் வீட்டார் என அனைவரும் சூழ்ந்திருக்க, மணப்பெண் நடனமாடிக் கொண்டே மேடைக்கு வருவது. மணமகன் பறந்து வருவது என வித்தியாசம் காட்டியும் வருகின்றனர். திருமணத்திற்கு வாழ்த்த வந்திருப்பவர்களை கவர்ந்திழுக்க பல வகையான அமர்க்களங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில்  விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அருண்,  கனகலட்சுமி திருமணம் நடைபெற்றது. இதனை கொண்டாடவும் , மணமக்களை வாழ்த்தவும் மணமகன் அருணின் நண்பர்கள் வித்தியாசமாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது  குறித்த  போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில்,  செஞ்சி அருகே பரபரப்பு வாலிபர் கைது! 
குற்றம்: பெண்ணின் மனதை திருடி விட்டார். 
தீர்ப்பு: மூன்று முடிச்சு போடுதல். 
கைது செய்யும் நாள் 10.2.2023 வெள்ளிக்கிழமை. 
கைது செய்யும் இடம்: மயிலம் முருகன் திருக்கோயில். 
தண்டனை வழங்கப்படும் இடம்:  மனோரஞ்சிதம் திருமண மண்டபம் செஞ்சி. 
கைதானவர் எம்.அருண். 
கைது செய்தவர் எஸ்.கனகலட்சுமி. 
...சாட்சிகள்...

திருமணம்
என அச்சிடப்பட்டிருக்கிறது. நண்பர்கள் வாழ்நாள் முழுவதும் மனைவியின் மன சிறையில் தங்களது நண்பர் இருக்க போகிறார் என்று கூறினாலும், இதெல்லாம் நட்புக்குள்ள சகஜம் தானப்பா.. ஆனா, இதை நண்பர்களோட நிறுத்திக் கொள்ள வேண்டும். பெரியோர்கள் வாழ்த்த வருகிற இடத்தில் இப்படி அபசகுணமா ஏன் வைக்க வேண்டும்? சுப நிகழ்வு என்பது மாறி திருட்டு, கைது, தீர்ப்பு என கலாச்சார பிறழ்வை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர் என நெட்டிசன்கள் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web