சாக்கடை லாரியில் மாப்பிள்ளை ஊர்வலம் ... வேலையை கேலி செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த சீன இளைஞர்!
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் ஒரு அதிரடியான திருமண ஊர்வலம் அரங்கேறி, தற்போது இணையத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. 'பான்' என்ற இளைஞர், தனது திருமண ஊர்வலத்திற்காக விலை உயர்ந்த கார்களையோ அல்லது குதிரைகளையோ பயன்படுத்தாமல், கழிவு நீர் மற்றும் சாக்கடை அள்ளும் லாரியைப் பயன்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். "என்னது.. கல்யாணத்துக்கு சாக்கடை லாரியா?" என ஊரே வாயைப் பிளந்தாலும், மணமகன் பான் மிகத் கெத்தாக அந்த லாரியில் வலம் வந்துள்ளார்.
In China, a wedding convoy was made up of sewage trucks.
— NEXTA (@nexta_tv) April 8, 2026
The groom works in a family sewage-cleaning business and suggested the idea himself. All the vehicles were thoroughly washed and decorated.
The bride had no objections. According to her, she’s happy that her husband earns… pic.twitter.com/dOuRMwAfZz
இந்த விசித்திரமான முடிவுக்கு அவரது காதலியும் (தற்போது மனைவி) முழு மனதுடன் சம்மதம் தெரிவித்ததுதான் ஹைலைட்! பானின் பெற்றோர் நீண்ட காலமாகக் கழிவுநீர் அகற்றும் தொழிலைச் செய்து வந்த நிலையில், தற்போது பானும் அதே தொழிலைத் தான் செய்து வருகிறார். "நம்ம தொழிலை நாம ஏன் கேவலமா நினைக்கணும்?" என்று யோசித்த பான், தனது வாழ்வின் மிக முக்கியமான நாளில், தனக்கும் தன் குடும்பத்திற்கும் சோறு போடும் அந்தத் தொழிலுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த ஊர்வலத்தைத் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய பான், "என் வேலை பார்ப்பதற்கு அழுக்காகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருக்கலாம். ஆனால், நான் இதை நேர்மையாகவும் உழைப்பை நம்பியும் செய்கிறேன். இதில் எனக்குப் பெருமைதான். இது ஒரு உணர்வுபூர்வமான செயல்" எனத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "வேலையில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை உலகுக்கு உணர்த்திய உண்மையான ஹீரோ" என அந்தப் புதுமணத் தம்பதியைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். எது எப்படியோ, பானின் இந்த 'கழிவுநீர் லாரி' ஊர்வலம், சீனாவையே ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
