குரூப் 4 ‘மெகா’ அப்டேட்: காலிப்பணியிடங்கள் 9,577 ஆக உயர்வு... கட்-ஆஃப் குறையும் வாய்ப்பு!

 
TNPSC குரூப் 1 ரிசல்ட் வெளியீடு!!

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான குரூப் 4 தேர்வர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மீண்டும் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை உயர்த்தப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது மூன்றாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,577 ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 10,000 பணியிடங்களை நெருங்கிவிட்டதால், தேர்வர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் வெறும் 6,244 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 645 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ள துறைகளில், இம்முறை வாரியங்கள் மற்றும் கழகங்களில் அதிக இடங்கள் குவிந்துள்ளன.

டிஎன்பிஎஸ்சி

597 புதிய இடங்கள்: வீட்டு வசதி வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்கள் மற்றும் கழகங்களில் புதிதாக இந்த இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதர பிரிவுகள்: கிராம நிர்வாக அலுவலர் (VAO) பிரிவிலும் இளநிலை உதவியாளர் (Junior Assistant) பிரிவிலும் கணிசமான இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

குரூப் தேர்வு டிஎன்பிஎஸ்சி

மொத்த இடங்கள் 9,500-ஐ தாண்டியுள்ளதால், கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது என்று போட்டித் தேர்வு ஆலோசகர்கள் கூறுகின்றனர். இதனால், தரவரிசைப் பட்டியலில் சற்றுப் பின்னால் உள்ள தேர்வர்களுக்கும் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் டிசம்பர் 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. தேர்வர்கள் திருத்தப்பட்ட விரிவான பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!